தமிழர் பண்பாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும்.
தமிழர் பண்பாடு பல காலமாக பேணப்பட்டு, திருத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஒரு இயங்கியல் பண்பாடே.
"தமிழர் பண்பாட்டின் அமைப்பொழுங்கானது அடிப்படையில் இரண்டு அம்சங்கங்களைக் கொண்டதாகும். ஒன்று: அதனளவில் சார்புடையது (culture dependent). மற்றறொன்று, உலகளாவிய அமைப்பியல்புகளோடு பொருந்தக்கூடியது (culture independent). அதாவது, தமிழ்ப் பண்பாட்டின் உருவகத்தைத் தரக்கூடிய 'புறக் கூறுகள்' பண்பாட்டு சார்ந்தும், அவற்றின் 'அகக் கூறுகள்' உலகளாவிய அமைப்புகளோடு ஒத்திசைவு பெறுவதும் இதன் உட்பொருளாகும்." [1]
பல சந்தர்ப்பங்களில் தமிழர் பண்பாடு இது, தமிழர் பண்பாடு இதுவல்ல என்று தெளிவாக வரையறைப்பது கடினமாகினும் ஒரு அறிவுசார் மதிப்பீடு செய்யமுடியும். எடுத்துக்காட்டாக யூத சமயமோ, சீக்கிய சமயமோ தமிழர் பண்பாட்டு வட்டத்துக்குள் வரமாட்டாது, மாற்றாக சைவ சமயத்துக்கு தமிழர் பண்பாட்டுடன் ஒரு இறுகிய தொடர்பு உண்டு.
தமிழ்ப் பண்பாடு பிரேஞ்சுப் பண்பாடு
“ | தமிழ்ப் பண்பாடு தற்பண்பை வலியுறுத்துகிறது. பிரேஞ்சுப் பண்பாடு தற்பற்றை வலியுறுத்துகிறது. பழமையில் திராவிடப் பண்புகள் கொண்டிருந்த தமிழ்ப் பண்பாடு தற்போது சமஸ்கிரதப் பண்புகள் மிகுந்த பண்பாடாக உள்ளது. பிரேஞ்சுப் பண்பாடு செல்திய, ரோமானிய, பறங்கிய பண்பாடுகள் கலந்த ஒரு கலப்புப் பண்பாடாகவும் உள்ளது. மனிதா சமுதாயங்களும் சரி; அவற்றின் பண்பாடுகளும் சரி, என்றென்றும் மாறாமல் நீடித்து நிலைத்தது வந்தது கிடையாது. அவை எப்பொழுதும் மாறுதலுக்கு உட்பட்டே வருகின்றன. தமிழ்ச் சமுதாயத்தில் மிகச் சிறிய அலகு ஒரு குடும்பம். ஆனால் பிரேஞ்சு சமுதயா அலகு ஒரு தனிநபர் | ” |
No comments:
Post a Comment